கட்டணம் காட்சிப்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு தனிப்பட்ட எரிபொருள் கோட்டா வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் வழங்கப்படும் எண்ணெய் ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக அதே எரிபொருள் ஒதுக்கீடு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.