கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 7,000 பேக்கரிகளில் சுமார் 2,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பேக்கரிகள் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக 13,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோகிராம் மா மூடை, 20,000 ரூபா வரை கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தையில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு இறத்தல் பாண் 300 ரூபாவாக உயர்ந்துள்ளது.