உலகின் புகழ்பெற்ற சமூக வலையத்தளமான இன்ஸ்டகிராமிற்கு, அயர்லாந்து நீதிமன்றம் 405 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.
சிறுவர்களின் தனியுரிமையை மீறும் குற்றச்சாட்டின் பேரில் இந்த அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டகிராம் நிறுவனத்தின் புகார்கள் மீதான நீண்ட விசாரணைக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் அயர்லாந்தின் தரவுப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார்.
இந்த தீர்மானம் தொடர்பான முழு விபரம் இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டகிராம் பயன்படுத்தும் சிறுவர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் என்பன கண்காணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.