களனி கங்கையில் தொடர்ந்தும் சிறியளவிலான வௌ்ள அபாய நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே அவதானமாக இருக்குமாறு களனி ஆற்றை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று காலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் நாட்டில் அதிகூடிய மழைவீழ்ச்சி புளத்கொஹூப்பிட்டியவில் பதிவாகியுள்ளது.
அங்கு 206 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்று(05) காலை 8.30 மணி முதல் இன்று(06) காலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பகுதியில் 109.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பலத்த மழையினால் புளத்சிங்கள – மோல்காவ வீதி, வௌ்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.