இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டண முறைமையினால் சுமார் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் கொள்வனவுக்கு பணம் செலுத்துவதற்கு எரிபொருள் கூட்டுத்தாபனம் புதிய முறையொன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
நாளை மறுதினம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு இரவு 9.30 மணிக்கு முன்னதாக எரிபொருள் இருப்புக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அவ்வாறு செலுத்துவது கடினமாகும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இரவு 9.30 மணிக்கு முன்னர் பணம் செலுத்தத் தவறினால் மறுநாள் எரிபொருள் கிடைக்காது.
இதன் காரணமாக நாளாந்தம் சுமார் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.