தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆனால் அவர் அரசியலில் ஈடுபடுவாரா இல்லையா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டவசமாக நாட்டிலிருந்து வெளியேறிய அவர் தற்போது நாடு திரும்பியுள்ளார்.
இன்னொருவர் தொடர்பாக தீர்மானிக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை.
முன்னாள் ஜனாதிபதி தனது முடிவை அறிவித்தவுடன் கட்சியின் நிர்வாக சபைக்கு அறிவிப்போம்.
அவருக்கு இலங்கையில் வசிக்கவும், அரசியலில் ஈடுபடவும் அனைத்து உரிமைகளும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.