Monday, September 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கின் சந்தேக நபர்கள் விடுதலை

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கின் சந்தேக நபர்கள் விடுதலை

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் லக்‌ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் ‘மொரிஸ்’ என்றழைக்கப்படுகின்ற செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா இலக்கம் ஒன்று நீதிமன்றத்தில் நீதவான் மாபா பண்டார வழக்கின் தீர்ப்பை இன்று(01) அறிவித்தார்.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 06ஆம் திகதி வெலிவேரிய காந்தி விளையாட்டரங்கிற்கு அருகில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கொலை செய்யப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகராக செயற்பட்ட லக்‌ஷ்மன் குரே, குறித்த குண்டுத் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபடடுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles