Saturday, January 31, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணத்தையும் உரத்தையும் தர மறுக்கும் சீன நிறுவனம்

பணத்தையும் உரத்தையும் தர மறுக்கும் சீன நிறுவனம்

சீன உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட 6.9 மில்லியன் டொலர்கள் அல்லது அதற்குப் பதிலாக இரசாயன உரங்களைப் பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்று (1) நாடாளுமன்றத்தில் அத்துரலியே ரதன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து தீர்வுகளை முன்வைப்பதற்காக விவசாய அமைச்சின் செயலாளர் தலைமையில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles