2021 ஆகஸ்ட் முதல் 2022 ஆகஸ்ட் வரை ஒருவர் சேமித்த ஒரு இலட்சம் ரூபாவின் பெறுமதி, தற்போது 30 ஆயிரம் ரூபாவாக குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (31) நடைபெறும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ‘மக்களின் மொத்த சேமிப்பில் 70% ராஜபக்ஷர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இன்று எமது நாடு மரணப் பொறியை நெருங்கியுள்ளது என்று கூறுவதில் தவறில்லை. இந்த நெருக்கடியை அவர்களால் தாங்க முடியாததால் அதனை எதிர்த்து போராடினர்.’
மேலும், ‘பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சகத்திலிருந்து வெளியேற்றினர். மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கோட்டாபய ராஜபக்ஷ வெளியேற்றப்பட்டார். இது வருத்தமளிக்கிறது. ஆனால் அது நடந்தது. மொட்டுக்கட்சியும் ராஜபக்ஷர்களும் நாட்டை அழித்தார்கள். அதைச் சொல்ல மக்கள் பயப்படவில்லை!’ என்றும் கூறினார்.