கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதால், இலங்கைக்கான கோதுமை மாவின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகளுக்கு கோதுமை மா- ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்தியுள்ளது.
தமது கோதுமை உற்பத்தியை பாதுகாப்பு கையிருப்பாக பராமரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது இலங்கைக்கு துருக்கியில் இருந்து மட்டுமே கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியும்.