அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டை, கடுவெல மற்றும் மஹரகம மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 3 ஆம் திகதி காலை 8 மணி முதல் செப்டெம்பர் 4ம் திகதி வரை 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.