ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் வயதெல்லையை 60 வரை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
திருத்தப்பட்ட இடைகால பாதீட்டு யோசனையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் வயதெல்லை 65 வரை அதிகரிக்கப்பட்டமையினால், தொழில் வாய்ப்புக்கள் அற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன், பதவி உயர்வுகள் வழங்கப்படுவதும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதனால், ஓய்வூதியம் பெற்றுக்கொள்வோரின் வயதெல்லை 60 வயது வரை குறைக்கப்படுகின்றது.
தற்போது 60 வயதுக்கு அதிகமான வயதை கொண்டவர்கள் பணியாற்றுவார்களாயின், அவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் கட்டாய ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.