போராட்டக்காரர்களினால் கொழும்பில் இன்று (30) நடத்தப்படவுள்ள போராட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் ஆதரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போராட்டத்தின் போது வன்முறைச் செயல்கள் நடந்தால் சட்டத்தை முறையாக அமுல்படுத்தி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.