Saturday, May 10, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு, ஒரு முட்டையை 50 ரூபாவுக்கு விற்பனை செய்ய வர்த்தக அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீதான சோதனை நடவடிக்கையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு அல்லது பழுப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயம் செய்து வர்த்தக அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

எனினும்இ வர்த்தமானி அறிவித்தல் மூலம் முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்னரேஇ ஒரு முட்டை 60 ரூபா தொடக்கம் 70 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இதன்காரணமாக வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் முட்டையை விற்பனை செய்ய முடியாது என முட்டை உற்பத்தியாளர்களின் தொடர் கோரிக்கையை கருத்திற் கொண்டு முட்டை ஒன்றின் விலையை 50 ரூபாவாக அதிகரித்து விரைவில் நிர்ணய விலையை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles