கனேமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடையொன்றையும் அதன் உரிமையாளரையும் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடை உரிமையாளரின் மகனால் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹொரகொல்ல கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை தேடி கனேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.