நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை தண்டிக்குமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
சில சட்டத்தரணிகளும், நீதிபதிகளும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்கியதாக அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் சனத் நிஷாந்த தெரிவித்திருந்தார்.
அவருடைய இந்த கருத்தானது நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருக்கின்றதா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையிலேயே, சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.