Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் - கஞ்சன விஜேசேகர

மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் – கஞ்சன விஜேசேகர

மின்கட்டண அதிகரிப்பு மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் சபையின் செலவீனங்களை ஒப்பிடும் போது இது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்று என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்காக 7600 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை செலுத்த வேண்டுடியுள்ளது.

மேலும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மட்டும் 3100 கோடி ரூபா செலுத்த வேண்டியுள்ளது.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles