Saturday, July 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுராஜகிரியவில் கடையொன்றில் பூனை மலத்துடன் பரிமாறப்பட்ட உணவு

ராஜகிரியவில் கடையொன்றில் பூனை மலத்துடன் பரிமாறப்பட்ட உணவு

கடந்த 28ஆம் திகதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் பூனைக்கழிவுகள் அடங்கிய நுகர்வுக்கு உகந்ததல்லாத உணவுகளை விற்பனை செய்த 30 கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு எட்டு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

மாநகர சுகாதார வைத்திய அதிகாரி மனோஜ் ரொட்ரிகோ தலைமையில் அப்பகுதி பொதுமக்களின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ராஜகிரியில் உள்ள பிரபல கடையின் சமையல் அறையில் பூனை மலத்தை பார்த்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குற்றத்தின் தன்மைக்கேற்ப அவர்களுக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம், பதினைந்தாயிரம் என தனித்தனியாக 82,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையில், சில கடைகளில் சமைத்த உணவுகளுடன் குளிர்சாதனப் பெட்டியில் இறைச்சி மற்றும் மீன்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஈக்கள் கொசுக்கள் மொய்க்கும் வகையில் கடைகளில் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles