தற்போதைய நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 2000க்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மொத்த சந்தையில் தற்போது 50 கிலோகிராம் கோதுமை மா 17 ஆயிரம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.