Monday, July 21, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் கட்டணத்தை செலுத்தாத MPகளின் குடியிருப்புகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க திட்டம்

நீர் கட்டணத்தை செலுத்தாத MPகளின் குடியிருப்புகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க திட்டம்

மூன்று மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்தத் தவறும் அரச நிறுவனங்களிடமிருந்து 2.5% தாமதக் கட்டணமாக அறவிட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

நீர் கட்டணத்தை செலுத்துவதில் தவறிழைக்கும் அரச நிறுவனங்களிடமிருந்து இதற்கு முன்னர் தாமதக் கட்டணம் எதுவும் அறவிடப்படவில்லை என அதன் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்தார்.

இதேவேளை, இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நீர் கட்டணத்தை செலுத்த தவறியதாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பாக்கியை வசூலிப்பது குறித்து பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles