பொதுத்துறைக்கு கிடைக்கும் வசதிகளை தனியார் துறையினரும் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
தனியார் துறையினரும் இவ்வாறான வசதிகளைப் பெற்றால், எதிர்காலத்தில் பலர் அரசாங்கப் பொறிமுறைக்குள் நுழைய முயற்சிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டின் அரச செயற்திட்டங்கள் தேசத்தின் நலனுக்காக வடிவமைக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான வழிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளார் எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.