பாடசாலை மதிய உணவு முறையின் போஷாக்கு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில், அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கைக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.
போசாக்கு மட்டத்தில் உயர்ந்த 890 மெட்ரிக் டன் இளஞ்சிவப்பு செமன் மற்றும் 2000 மெட்ரிக் டன் பருப்பு என்பன அவற்றில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சேவ் த சில்ட்ரன் நிறுவனத்தின் (Save the Children) நேரடித் தலையீட்டின் கீழ், கல்வி, நிதி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.