உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் 1000 மெற்றிக் டன் யூரியா உரம் எதிர்வரும் பதினைந்து நாட்களுக்குள் நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயத்துக்காக 50 கிலோகிராம் நிறையுடைய 375,000 பொதிகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம தெரிவித்தது.
இந்த யூரியா உரம் ஒரு ஏக்கருக்கும் குறைவான நெல் வைத்திருக்கும் 375,000 விவசாயிகளுக்கு தலா ஒரு பொதி வீதம் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.