14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது.
ரஷ்யா – யுக்ரைன் போர் நெருக்கடியால் மசகு எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகிறது.
இதனால் மசகு எண்ணெய் இறக்குமதியாளர்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
மேலும், வளர்ந்துவரும் நாடுகளுக்கு மசகு எண்ணெய் விலை உயர்வானது, பொருளாதாரத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக, அந்த நாடுகளில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.