செய்திகள்உள்நாட்டுரஞ்சன் விடுதலையாகும் நாளை கூறினார் ஹரின்

ரஞ்சன் விடுதலையாகும் நாளை கூறினார் ஹரின்

ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகும் திகதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது முகநூலில் ஒரு குறிப்பைப் இட்டுள்ளார்.

”எனது அன்பான அரசியல் சகாவான ரஞ்சன் நாளை (26) அல்லது சனிக்கிழமை (29) விடுதலை செய்யப்படுவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.எனது மற்றும் மனுஷவின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்!”

எவ்வாறாயினும், இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினாலோ அல்லது ஜனாதிபதி ஊடகப் பிரிவினாலோ உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles