Tuesday, November 19, 2024
26.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு மருத்துவப் பொருட்களை வழங்கும் WHO

இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை வழங்கும் WHO

அவசர சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, 04 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ பொருட்கள், இலங்கைக்கு வழங்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்இ விநியோகிப்பதற்கான திகதிகள் மற்றும் பட்டியல்கள் உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகத்தினால் அறிவிக்கப்படும் எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று காரணமாக இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார அழுத்தத்தை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிப்பதாகவும், உலகளாவிய உணவு மற்றும் எண்ணெய் விலை உயர்வு பாதிக்கப்படக்கூடிய சமூகத்திற்கும் உலக நாடுகளுக்கும் பெரும் சவாலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு வசதிகளை வழங்க சுகாதார அமைப்பு தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles