பால் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாததால், உள்ளூர் பால் பால்மா உள்ளிட்ட பொருட்கள் சந்தையில் குறைந்துள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 600,000 லீற்றர் பால் தேவைப்படுவதாகவும், தற்போது 140,000 லீற்றர் பால் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அந் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாடுகள் சினைப் பிடிக்காததால், திரவ பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மூன்று வருடங்களுக்கு மேலாக, மாடுகள் சினைப்பிடித்தல் குறைந்துள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.