Saturday, November 16, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொலன்னவில் எரியுண்ட விருந்தகம் மஹிந்தவின் மகனுடையது?

கொலன்னவில் எரியுண்ட விருந்தகம் மஹிந்தவின் மகனுடையது?

மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகன் ரோஹித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என்று கூறப்படும் சொகுசு விருந்தகத்துக்கு, கடந்த மே 10ஆம் திகதியன்று தீயூட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொலன்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சிங்கராஜாவுக்கு அருகாமையில் கொலன்ன, எம்பிலிப்பிட்டிய கொங்கலகந்தவில் கிரீன் ஈகோ லொட்ஜ்’ என்ற பெயரில் இந்த விருந்தகம் அமைந்துள்ளது.

மே 10 அன்று போராட்டக்காரர்களால் இந்த விருந்தகம் தீக்கிரையாக்கப்பட்ட போது, அது மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவருடையது என்ற தகவல் வெளியானது.

எனினும் இரண்டாவது மகனான யோசித்த, அது தம்முடைய விருந்தகம் அல்ல என மறுத்திருந்தார்.

எனினும் பொலிஸ் விசாரணைகளின்போது, குறித்த விருந்தகம், மூன்றாவது மகனான ரோஹித்தவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

மூன்றாவது மகனான ரோஹித்த தனது தந்தை பிரதமராக இருந்த காலத்தில் எந்த உத்தியோகபூர்வ பதவியையும் வகிக்கவில்லை.

அவருடைய வருமான ஆதாரம் தொடர்பாகவும் தகவல் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles