நிதி அமைச்சராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி இடைக்கால பாதீட்டை (ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலம்) நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரை நிகழ்த்தவுள்ளார்.
அந்தப் பாதீட்டு உரை மீது, 3 நாட்களுக்கு விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒதுக்கீட்டுத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம், எதிர்வரும் 31, செப்டெம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன.