Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு முட்டையை உற்பத்தி செய்ய 53 ரூபா செலவாகிறது

ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 53 ரூபா செலவாகிறது

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என கோழிப்பண்ணையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கால்நடை தீவனத்திற்குத் தேவையான பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் விலைக் கட்டுப்பாட்டை விதிப்பது நியாயமற்றது என அதன் அழைப்பாளர் சஞ்சீவ கருணாசாகர தெரிவித்துள்ளார்.

ஒரு முட்டை உற்பத்திக்கு 53 ரூபா செலவாகிறது.

முட்டையின் விலை உயர்வுக்கான காரணங்களை அரசாங்கம் மதிப்பீடு செய்ய வேண்டும்.

கால்நடை தீவனத்திற்கு சோளம், சோயா சாறுகள், மீன் உணவுகள், விற்றமின்கள், புரதங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் பெரும்பகுதி தேவைப்படுகிறது.

உரப் பற்றாக்குறையினால் சோளத்தின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சோளம் இறக்குமதி செய்யப்படுகிறது.

டொலர் மதிப்பின் அதிகரிப்பு உற்பத்தி செலவுகள் அதிகரிக்க வழிவகுத்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles