Friday, May 9, 2025
28.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச சேவை ஆட்சேர்ப்பு பரீட்சைகளை நடத்தாதிருக்க முடிவு

அரச சேவை ஆட்சேர்ப்பு பரீட்சைகளை நடத்தாதிருக்க முடிவு

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக எந்தவொரு பரீட்சையையும் நடத்த வேண்டாம் என நிதியமைச்சு, பரீட்சை திணைக்களத்திற்கு நேற்று (23) அறிவித்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட ஆட்சேர்ப்புப் பரீட்சைகளின் முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டு;ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவைத் தொடர்ந்து பொது சேவை ஆட்சேர்ப்புகளை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அழகியல் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாதுள்ளதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles