Thursday, May 29, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவனின் காலணிக்குள் இருந்து தோன்றிய பாம்பு

மாணவனின் காலணிக்குள் இருந்து தோன்றிய பாம்பு

13 வயது மாணவன் ஒருவர் அணிந்திருந்த காலணிக்குள் பாம்புக் குட்டி இருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (23) காலை பாடசாலைக்கு செல்ல பேருந்தில் பயணித்த குறித்த மாணவன், தனது காலணிக்குள் ஏதோ நெளிவது போன்று உணர்ந்துள்ளார்.

காலணியை கழற்றி பார்த்த போது அதற்குள் குட்டி பாம்பு இருந்ததை கவனித்துள்ளார்.

ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாணவனை பாம்பு தீண்டியிருக்கவில்லை என வைத்திய பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜே.விஜேசூரிய தெரிவித்தார்.

இந்த பாம்புக் குட்டி வீட்டில் வைத்து மாணவனின் காலணிக்குள் புகுந்திருக்கலாம் எனவும், மாணவன் அதை கவனிக்காது காலணியை அணிந்து வந்திருக்கலாம் என்பது தெரிய வருகிறது. அதனால் காலணி அணிவதற்கு முன்னர் அதன் உட்புறத்தை பரிசோதிக்க கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles