நபர் ஒருவரிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் கைப்பேசியை திருடிய 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் மாலபே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் என்பதோடு இந்த திருட்டு சம்பவம் கொட்டாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.