இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சீருடையில் ஒரு பகுதியை 2023ஆம் ஆண்டுக்கான மானியமாக வழங்க சீன அரசாங்கம் இணங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக சீனக் குடியரசு இந்த உதவித்தொகையை வழங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.