Saturday, May 10, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2023 பாதீட்டில் அரச வருமானத்தை அதிகரிக்க திட்டம்

2023 பாதீட்டில் அரச வருமானத்தை அதிகரிக்க திட்டம்

அரச வருமானத்தை 11.3% ஆக அதிகரிப்பது உட்பட 4 முக்கிய விடயங்களை இலக்காகக் கொண்டு 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

அதன்படி, 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால கால வரவு செலவுத் திட்டத்தின் கட்டமைப்பிற்குள் எட்டப்படவுள்ள எதிர்பார்க்கப்படும் அரச நிதி இலக்குகளின் அடிப்படையில் அரசாங்கம் இந்தப் புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles