தேர்தலை நடத்துவதன் மூலமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் பின்னர் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்ற தீர்மானத்தின் ஊடாக நாளைய தினம் கூட நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தை நியமிப்பதற்கு தற்போது தேர்தலை நடத்துமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.