Sunday, May 11, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற ரஞ்சன் தகுதியானவர் - SJB

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற ரஞ்சன் தகுதியானவர் – SJB

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு மிகவும் பொருத்தமானவர் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க கொள்ளை அல்லது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு தாங்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தற்போது பல தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles