அரசாங்கம் தலையிட்டு தமது பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்காவிடின் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தமது தொழிலிலும் ஏற்படக்கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்தால் தற்போது 190 ரூபாவா விற்பனை செய்யப்படும் 400 கிராம் பாணை, 50 ரூபாவினால் குறைக்க முடியும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு செய்தால் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை கணிசமான அளவு குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திறன் பேக்கரி உரிமையாளர்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.