Saturday, November 16, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுQR முறை காரணமாக எரிபொருள் இறக்குமதி செலவு குறைந்துள்ளது

QR முறை காரணமாக எரிபொருள் இறக்குமதி செலவு குறைந்துள்ளது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு 500 மில்லியன் டொலர்களில் இருந்து 230 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள மக்களுக்கு ஒதுக்கீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகத் திட்டத்தை வழங்குவதைத் தவிர, QR முறையானது தேசிய கையிருப்பை சேமிப்பதற்கும் வழிவகுத்துள்ளது.

ஆறு மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் தற்போது தேசிய எரிபொருள் உரிமத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 93% எரிபொருள் நிலையங்கள் இந்த QR முறையைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles