முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையான புர்காவை அணிந்து சென்ற இளைஞர் (27) ஒருவரை காலி ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து காலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று காலை ரயில் நிலையத்திற்கு வந்த குறித்த இளைஞன் கொழும்பு செல்வதற்கான பயணச்சீட்டை வாங்கியுள்ளார்.
அவரின் குரலை கேட்டு சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர்.
பெண் உடை அணிந்திருந்த அவர் ஒரு ஆண் என அடையாளம் கண்டு கொண்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணைகளின் போது தனது காதலிக்கு வேறு ஒரு இளைஞனுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பிரகாரம் காதலியை வேவு பார்க்கவே தாம் இவ்வாறு வேடம் பூண்டு ரயில் நிலையத்திற்கு வந்ததாக குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.