Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் தாங்கிய கப்பலொன்றுக்கு 39.3 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது

எரிபொருள் தாங்கிய கப்பலொன்றுக்கு 39.3 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது

இலங்கைக்கு வந்த மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பலொன்றுக்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் ஊடாக குறித்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கப்பலில் உள்ள 28,300 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் டன் விமானங்களுக்கான எரிபொருள் என்பன நாளை முதல் இறக்கப்படும் என வலுசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், அண்மையில் நாட்டை வந்தடைந்த 37,300 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதாகவும், அதன்படி நாளைய தினம் நாட்டின் டீசல் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் கையிருப்பு 74,600 மெட்ரிக் டன் ஆக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles