100 வீதம் இல்லாவிட்டாலும் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எரிவாயு வரிசை மற்றும் எண்ணெய் வரிசையை முடிவுக்கு கொண்டு வருவதில் தான் உட்பட அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனால் சந்தர்ப்பவாத அரசியலால் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைப் பெற நினைத்தவர்களின் ஆசை கனவாகியுள்ளதாக திஸ்ஸ குட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.