Wednesday, January 15, 2025
25.8 C
Colombo
செய்திகள்விளையாட்டுஅவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் ரொட்னி மார்ஷ் காலமானார்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் ரொட்னி மார்ஷ் காலமானார்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் காப்பாளர் ரொட்னி மார்ஷ், தனது 74 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

நேற்று (03) குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள சென்றபோது மார்ஷின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1970 முதல் 1984 ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலியாவுக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் விடைபெறும்போது, ​​அந்த விக்கெட் எண்ணிக்கை உலக சாதனையாக இருந்தது.

92 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரொட் மார்ஷ், 2016 ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தெரிவுக் குழுவின் தலைவராக இருந்தார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் காப்பாளர்களின் பட்டியலில் மூன்றாவது வீரராக மார்ஷ் திகழ்ந்தார்.

இந்த பட்டியலில் அடம் கில்கிறிஸ்ட் (416 விக்கெட்டுகள்) முதல் இடத்திலும், இயான் ஹீலி (395 விக்கெட்டுகள்) இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

மார்ஷின் மறைவு குறித்து அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மார்க் வோ கூறுகையில், தேர்வாளராக பல ஆண்டுகளாக ரொட் மார்ஷுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அவரைப்போன்ற நேர்மையான, இளையோருக்கு மரியாதையளிக்ககூடிய ஒரு அதிகாரியை தான் கண்டதில்லை என்றும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles