Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலி முகத்திடல் சேதத்துக்கான நஷ்டஈட்டை போராளிகளிடமிருந்து பெற நடவடிக்கை

காலி முகத்திடல் சேதத்துக்கான நஷ்டஈட்டை போராளிகளிடமிருந்து பெற நடவடிக்கை

காலி முகத்திடல் போராட்டத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டத்தை, போராட்டக்காரர்களிடமிருந்து அறவிட தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு உரிமை காணப்படுகின்றது என கூறிய தரப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களிடமிருந்து முழுமையான நட்டஈட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அமைச்சுக்கு கீழ் காணப்படும் காலி முகத்திடலில் இருந்துஇ போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டமை சட்டத்திற்கு அமைவானது.

எந்தவொரு நபருக்கும் அரச சொத்துக்களை சேதப்படுத்தவோ, தம்வசப்படுத்திக் கொள்ளவோ உரிமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு நட்டஈடு பெற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில்இ எதிர்வரும் காலங்களில் அமைச்சின் அதிகாரிகளே பாரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டிவரும்.

அவ்வாறான நிலைமையை எதிர்நோக்க தமது அமைச்சின் அதிகாரிகளுக்கு இடமளிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles