இலங்கையில் தனிநபரொருவர், ஒரு மாதத்திற்கு வசிப்பதற்கு சராசரியாக 12,444 ரூபா போதுமானது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்திற்கான அறிக்கையின்படி, தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச மாதச் செலவு (தேசிய ரீதியிலான மதிப்பீடு) 12,444 ரூபா என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கிறது.
அதற்கைமய, கொழும்பு மாவட்டத்தில் வசிப்பதற்காக ஒருவருக்கு அதிகபட்சமாக 13,421 ரூபா தேவைப்படுவதாகவும், இது இலங்கையின் மாவட்டமொன்றில் நபரொருவர் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செலவிடும் அதிகூடிய தொகை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
