Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் இராஜாங்க அமைச்சரானார் அருந்திக பெர்னாண்டோ!

மீண்டும் இராஜாங்க அமைச்சரானார் அருந்திக பெர்னாண்டோ!

அருந்திக பெர்னாண்டோ மீளவும் இராஜாங்க அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துள்ளார்.

தென்னை, கித்துள், பனை, இறப்பர் செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த பொறிமுறை பண்டங்களின் உற்பத்தி, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக மீளவும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று (4) அவர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

அண்மையில், களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவப் பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திகவின் மகன் கைதுசெய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் இராஜாங்க அமைச்சின் கீழுள்ள தெங்கு அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான வாகனமொன்றும் தொடர்புபட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியிருந்து விலக அருந்திக்க பெர்னாண்டோ தீர்மானித்தார்.

சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என கண்டறியப்பட்ட நிலையில், தான் முன்னதாக வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவியை அருந்திக பெர்னாண்டோ இன்று மீளவும் ஏற்றுக்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles