சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களுக்கு கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்வதற்கான நிதி வசதிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.