Saturday, January 31, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச செலவினங்களை மட்டுப்படுத்த ஆலோசனை

அரச செலவினங்களை மட்டுப்படுத்த ஆலோசனை

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு, அரசாங்க செலவினங்களை மேலும் மட்டுப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதியின் செயலாளரும் இது தொடர்பில் அமைச்சு செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்களை வாடகைக்கு எடுப்பதையோ அல்லது புதிய குத்தகை அல்லது குத்தகை ஒப்பந்தங்களை மேற்கொள்வதையோ மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத் தேவைகளுக்கான வாகனங்களுக்கான தற்போதுள்ள ஒப்பந்தங்களை நீடிப்பதற்கு முன்னர் திறைசேரியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இயன்றவரை காகித பாவனையை குறைத்து தேவையான செயற்பாடுகளை இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகள் ஊடாக மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் எரிபொருள், மின்சாரம், தொடர்பாடல் வசதிகள் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரச துறையினரும் அதிகபட்ச தியாகங்களைச் செய்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles