அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகளை இன்று முதல் வழமையான முறையில் முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, வாரத்தின் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.