இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் கட்டாயம் 80% நாட்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த ஆண்டு அது தளர்த்தப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே 80% நாட்கள் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களும் பரீட்சைக்கு தோற்ற முடியும்.
கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.